Friday 12 October 2012

மறைந்துபோன நாட்களானாலும் ... மறையாத நினைவுகள் ....



நினைத்து நினைத்து பார்கிறேன்..

கல்லூரியின் சனிக்கியமை இரவையும் 
நிர்வாகத்தின் கட்டுக்கோபான கலாச்சாரத்தையும் 

விடுதியில் கணக்கில்லாமல் சாப்பிட்ட பூரி கொத்துகறியும் ..
மத்தியச்சேனையில் காசில்லாமல் சாப்பிட்ட கொத்துபரோட்டாவை யும் .....

துவைக்காமலே அணிந்த Jeans and Lab Uniformaium 
பெண்களை பார்க்கவே சென்ற கான்டீன் பயணமும் 

சரோக்கடை சர்பத்தும் ...
விருதுநகர் பயில்வான் குளிர்பானக்கடையும் ...

மறைந்துபோன நாட்களானாலும் ...
மறையாத நினைவுகள் ....





- கதிர்

வாழ்வதற்கு



பிறப்புக்கும் ...
இறப்புக்கும்...
உதவும் சொந்தங்கள் ...
ஏன் ....?
வாழ்வதற்கு...
உதவுவதில்லை ...?

இடையில் வரும் நட்போ.. 
விண்ணில் தோன்றும் 
வேன்னிலவுபோல...

- கதிர்

காதலித்துப்பார்



கஷ்டத்தை ...
காதலித்துப்பார் 
சுகமென்பதின்
சுவைதெறியும் -உனக்கு 


- KK

போராட்டம்





















போராடி பெற்ற சுதந்திரம்
இன்னும் .....
ஏழைகளுக்கு சென்றடையாதபோது -அதை 
போரிட்டு பெறுவதில் -ஒன்றும் 
தவறில்லை ....

- KK

விலையேற்றம்



தன் வாழ்கையை 
வசதிக்காக வாழாமல் 
பிறரின் வயிற்றுக்கு உணவிடுவதை 
உன்னதமாக எண்ணி உழைத்திட்ட 
விவசாயிக்கு 

வளர்ந்துவரும் 
விஞ்ஞானம் ....

விளைநிலங்களுக்கு 
வேலியிட்டு
விளம்பரத்தை பயிரிட்டு 
வெள்ளியை அறுவடை செய்ய 
அறிமுகபடுத்தியதன் விளைவு ............



- KK

காதலுக்கு கண்ணில்லை



அழகான பெண்கள் 
அன்பாக இருபதில்லை 

அன்பான ஆண்கள்
அழகாக இருபதில்லை.

காதல் மட்டும் 
அற்புதமாக மலர்கிறதே ...அதெப்படி ....?
ஒ ..............
இதைதான் காதலுக்கு 
கண்ணில்லை என்கிறார்களோ ...........?


- KK